“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” துவக்கவிழா
தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில மன்றம் (TNSCST) மற்றும் நம் கல்லூரி இணைந்து “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” துவக்கவிழா 13.05.2019 அன்று நம் கல்லூரியில் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற செயலாளர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிமன்ற உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கீழக்கரை, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதல்வர் முனைவர் E. ரஜபுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி முகாமை துவக்கிவைத்தார். இப்பயிற்சி முகாமில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் சுமார் 71 பேர் கலந்துகொண்டனர். வேதியியல் துறை தலைவர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார்.
கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஜனாப் S.A. ரஷீத் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக், கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், கல்லூரி சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், தேவகோட்டை, அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. குணசேகரன் உட்பட துறைதலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியினை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.
பின்னர் மாணவ-மாணவிகளுக்கு மனவளக்கலை பயிற்சியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. K.M. ஹாஜா நஜ்முதீன் ஆகியோர் அளித்தனர். மாலை அறிவியல் ஆய்வக செய்முறை வகுப்புகள் நடைபெற்றன.