மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி
ஆங்கிலத்துறையை சார்ந்த 17 மாணவிகள் காரைக்குடி, அழகப்பா மேலாண்மை கல்லூரி 20/02/2020 அன்று நடத்திய மகளிருக்கான “சக்தி சங்கமா” என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கலை போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் (Overall Champion) பெற்று வெற்றி பெற்றுள்ளனர். நடனம் மற்றும் புகைப்பட இணைவு ஆகிய பிரிவுகளில் முதலிடம் பெற்றனர். இரண்டாமாண்டு ஆங்கிலம் பயிலும் ஆசிபா சீரின் என்ற மாணவி ஒட்டுமொத்த சாம்பியன் வென்று, மிஸ் யானா (Miss Yana) என்னும் பட்டத்தை வென்றார். நடித்துக்காட்டல் பிரிவில் இரண்டாமிடமும், கண்ணாடியில் படம் வரைதல் பிரிவில் மூன்றாமிடமும் பெற்றனர். 15 கல்லூரிகள் பங்கேற்ற போட்டிகளில் நம் கல்லூரி மாணவிகள் முதலிடத்தை பெற்றுள்ளனர். ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் முனைவர் M. அனிஷா பர்வீன் மற்றும் திருமதி D. வர்ஷா ஆகியோர் மாணவிகளை ஒருங்கிணைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.