திறன் வளர் போட்டிகள் (மாணவர்கள்) – 2020
மதுரை, மொழி பயிற்சி மையம் மற்றும் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து கடந்த ஜூன் மாதம் முதல் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் திறன், ஆளுமைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 26/02/2020 அன்று மாணவர்களுக்கு திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்களுக்கு கட்டுரைகளை சமர்ப்பித்தல் (Power point presentation), ஆளுமை போட்டி (Professional Perade), ஆங்கில வார்த்தைகள் சேர்த்தல் (Quotes Quest), ஆங்கிலத்தில் கதை கூறல் (Story Telling), மாறுபட்ட தலைப்புகளில் பேசுதல் (Extempore), ஓரேநேரத்தில் பல பணிகளை செய்தல் (multitasking), ஆங்கில பட்டிமன்றம் (Debate), மௌனமாக நடித்து காட்டல் (mime), வினாடி வினா (Quiz) போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் பரிசுகளை வழங்கினர்.