நாட்டு நலப்பணித் திட்ட (NSS) இரண்டாம் நாள் முகாம்
நாட்டு நலப்பணித் திட்டம் இரண்டாம் (07/02/2020) நாள் சிறப்பு முகாம் “சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு” என்னும் தலைப்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். காலை மாணவ-மாணவிகள் கோவில் வளாகம், அங்கன்வாடி பள்ளி ஆகியற்றை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. திருவள்ளூர் கிராம மக்கள் சார்பாக இளையான்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர், திருமதி ராஜேஸ்வரி அவர்களிடம் மாணவ-மாணவிகள் பொதுக்கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்து தருமாறு கோரிக்கை மனுவினை அளித்தனர். சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பேரணி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் T.C. முஹம்மது முனீப் நன்றி கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் M. பீர் முஹம்மது மற்றும் செல்வி R. செய்யது அலி பாத்திமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வணிகவியல்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி M. மகேஸ்வரி மற்றும் கணிப்பொறி பயன்பாட்டியியல் துறை உதவிப்பேராசிரியர் திரு. S. அரபாத் ஹசன் உட்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் 157 பேர் கலந்துகொண்டனர்.