நாட்டு நலப்பணித் திட்ட (NSS) நான்காம் நாள் முகாம்
நாட்டு நலப்பணித் திட்டம் நான்காம் (09/02/2020) நாள் சிறப்பு முகாம் “பெண்களின் உரிமை தினம்” என்னும் தலைப்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி, உதவிப்பேராசிரியர்கள் திருமதி C. மாரியம்மாள் மற்றும் திருமதி S.N. சுலிபாநஸ்ரின் பாத்திமா ஆகியோரும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் மற்றும் கணிப்பொறி பயன்பட்டியியல் துறை உதவிப்பேராசிரியர் திரு.S. அரபாத் ஹசன் ஆகியோரும் பெண் உரிமை மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பேசினர். காலை நிகழ்விற்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது நன்றி கூறினார்.
மதியம் நடைபெற்ற நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் வீடு, வீடாக சென்று பெண்கள் உரிமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்கு செலுத்த பணம் பெற வேண்டாம் என்று பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். மாணவர்கள் திருவள்ளூர் பள்ளிவாசல் வளாகத்தை சுத்தம் செய்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் T.C. முஹம்மது முனீப், செல்வி R. செய்யது அலி பாத்திமா உட்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் 157 பேர் கலந்துகொண்டனர்.