ஓட்டப்பந்தயத்தில் நான்காம் இடம்
நம் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை தமிழ் பயிலும் மாணவி செல்வி அனிதா 03/09/2019 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான 10 KM (Cross Country Race) ஓட்ட பந்தயத்தில் நான்காம் இடம் பெற்றார். மேலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் அழகப்பா பல்கலை கழகம் சார்பாக பங்கு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியை மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. K.M. காஜா நஜ்முதீன், திருமதி N. வெற்றி மற்றும் திருமதி T. ஐஸ்வர்யா ஆகியோரை கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணைமுதல்வர், சுயநிதி பாட பிரிவு இயக்குனர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.