காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு
நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 10/04/2021 அன்று “காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள்” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா அவர்கள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். சென்னை, சுற்றுச்சூழல் பொறியாளர், திரு. V. பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றின்னார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. K.P.M. செய்யது யூசுப் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது நிகழ்வினை ஒருங்கிணைத்து நன்றி கூறினார். நிகழ்வில் மாணவ-மாணவியர், பேராசிரியர்கள், அலுவலர்கள் 50 பேர் இணையவழியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.