
COVID-19 கொரோனா பரிசோதனை

தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி, 06/01/2021 அன்று நம் கல்லூரியில் மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவர் நூனா அப்ரஹாமா, சுகாதார மேற்பார்வையாளர் திரு. K. தமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் திரு A. பிச்சை, திரு. R. அருண் மைகேல் டேனியல், திரு. J. அருண் யோசுவா மற்றும் மருந்தாளர் திருமதி G. மஹேஸ்வரி மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் திருமதி K. மல்லிகா ஆகியோர் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் A. அப்ரோஸ், திரு. K.P.M. செய்யது யூசுப், UBA ஒருங்கிணைப்பாளர் முனைவர் K. சுல்த்தான் செய்யது இப்ராஹிம் ஆகியோரும் ஒருங்கிணைத்தனர்.




