
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மாணவ-மாணவியர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 10/03/2021 அன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமைதாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. மதுசூதன ரெட்டி அவர்கள் சிறப்புவிருந்தினாராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், போட்டித்தேர்வுகளுக்கு தயார்செய்தல் எவ்வாறு என்பது குறித்தும் பேசினார். நிகழ்வில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், கல்வியியல் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், இளையான்குடி வட்டாச்சியர் திரு. ஆனந்த், துணைவட்டாச்சியர் திரு. இளங்கோ, திரு. முத்துவேல், வருவாய் ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் வருவாய் அலுவலர்கள், பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியினை இளையான்குடி பேரூராட்சி அதிகாரிகளுடன் நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் நிகழ்வினை ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.








