
சாலை பாதுகாப்பு வார விழா

நாட்டு நலப்பணத்திட்டம் (NSS) சார்பாக (22/02/2021) அன்று “சாலை பாதுகாப்பு வார விழா” கொண்டாடப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். இளையான்குடி காவல் நிலைய போக்குவரத்து சார் ஆய்வாளர்கள் திரு. T. முருகேசன், திரு. A. ஜான் கென்னடி மற்றும் சிவகங்கை மாவட்ட அரசு அவசர ஊர்தி (ambulance) ஒருங்கிணைப்பாளர் திரு. N. சௌந்தர பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு, விபத்து முதலுதவி மற்றும் சாலைவிதிகளை மதித்து நடப்பதின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளித்தனர். நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியர், கல்லூரி பேருந்து ஓட்டுனர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. K.P.M. செய்யது யூசுப் நன்றி கூறினார். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது ஒருங்கிணைத்தார்.





