நம் கல்லூரியில் இறுதியாண்டு இளங்கலை வேதியியல் பயிலும் 5 மாணவிகள் திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி, வேதியியல் துறை 27/02/2020 அன்று நடத்திய வேதியியல் திருவிழா (JAM CHEM FEST 2K20) போட்டியில் பங்கேற்றனர். மாணவி P. மதுமிதா Chem Presentation பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றார். தமிழகம் முழுவதும் 22 கல்லூரிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.…
நம் கல்லூரி வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) துறை மாணவிகள் 32 பேர் மற்றும் 2 பேராசிரியர்கள் தேவகோட்டை, ஆனந்தா கல்லூரியில் 28/02/2020 அன்று நடைபெற்ற “டிஜிட்டல் பரிவர்த்தனைகள்- நன்மைகள் மற்றும் சவால்கள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்றனர். 13 மாணவிகள் தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இளங்கலை வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) பயிலும் S. பாத்திமா…
நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) நிறைவு விழா (12/02/2020) அன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா நாட்டு நலப்பணித்திட்ட ஏழுநாள் முகாம் அறிக்கையை வாசித்தார். திருவள்ளூர்,…
நாட்டு நலப்பணித் திட்டம் ஆறாம் (11/02/2020) நாள் சிறப்பு முகாம் “இலவச கண் பரிசோதனை, புற்றுநோய் மற்றும் இரத்தசோகை விழிப்புணர்வு முகாம்” என்னும் தலைப்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் T.C. முஹம்மது முனீப் வரவேற்றார். காலை நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் பரமக்குடி, வாசன் ஐ கேர், மேலாளர், திரு. P.…
நாட்டு நலப்பணித் திட்டம் ஐந்தாம் (10/02/2020) நாள் சிறப்பு முகாம் “புற்றுநோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு தினம்” என்னும் தலைப்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். வழக்கறிஞர் திரு. சிவகுமார் அவர்கள் மாணவ-மாணவிகளிடம் நோய் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பு முறைகள் குறித்து பேசினார். காலை…
தேசிய வாக்காளர் தினம் 25/01/2020 முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். விலங்கியல் துறை தலைவர் முனைவர் S. ஆபிதீன், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை…
தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 25/01/2020 அன்று இளையான்குடி, மேலப்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மற்றும் இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் வணிகவியல் துறை தலைவர் முனைவர் K. நைனா முஹம்மது…
கல்லூரியில் 71வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இளையான்குடி, சாலையூர், ஜனாப் A.M. ரஷீத் கான், B.Com., F.C.A. அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர்…
தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 22/01/2020 அன்று எமனேஸ்வரம், SNV மேல்நிலைப்பள்ளி மற்றும் பரமக்குடி, லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் திரு. R.…
தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 30/01/2020 அன்று பார்த்திபனூர், அரசு மேல்நிலைப்பள்ளி, அபிராமம், முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முதுகுளத்தூர், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற…