50வது விளையாட்டு விழா
கல்லூரியில் 50வது விளையாட்டு விழா 19/02/2020 அன்று நடைபெற்றது. துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புவிருந்தினராக இளையான்குடி, காவல்துறை உதவி ஆய்வாளர், திரு. T. பழனிமுத்து அவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் விளையாட்டு துறையின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட, காவல்துறை துணை கண்காணிப்பாளர், திரு. P. அப்துல் கபூர் அவர்கள் கலந்துகொண்டு நிறைவு விழா உரையாற்றினார். மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வெற்றி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.
விளையாட்டு போட்டிகள் மற்றும் விழாவினை உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. K. காஜா நஜ்முதீன், திருமதி N. வெற்றி மற்றும் திருமதி T. ஐஸ்வர்யா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் K.S.H. சிராஜுதீன்மற்றும் ஜனாப் S.K.M. அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.