
வேதியியல் போட்டிகளில் வெற்றி

நம் கல்லூரியில் இறுதியாண்டு இளங்கலை வேதியியல் பயிலும் 5 மாணவிகள் திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி, வேதியியல் துறை 27/02/2020 அன்று நடத்திய வேதியியல் திருவிழா (JAM CHEM FEST 2K20) போட்டியில் பங்கேற்றனர். மாணவி P. மதுமிதா Chem Presentation பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றார். தமிழகம் முழுவதும் 22 கல்லூரிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். உடன் துறைத்தலைவர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர் மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர் K. சுல்த்தான் செய்யது இப்ராஹிம்.
