
வேதியியல் கருத்தரங்கில் பங்கேற்பு

நம் கல்லூரியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு இளங்கலை வேதியியல் பயிலும் மூன்று மாணவிகள் முதுகுளத்தூர், சோணை மீனாள் கல்லூரியில் 05/03/2020 அன்று நடைபெற்ற மாநில அளவிலான “நவீன வேதியியல் ஆராய்ச்சிகள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றனர். முதலாமாண்டு இளங்கலை வேதியியல் பயிலும் P. பாலபவித்ரா என்னும் மாணவி நானோ தொழில்நுட்பம் குறித்த கட்டுரையை சமர்ப்பித்து இரண்டாம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் துறைத்தலைவர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர் ஆகியோர் பாராட்டி சான்றிதழை வழங்கினர்.
