
மலை ஏறும் பயிற்சி முகாம்

நம் கல்லூரியில் பயிலும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, மனவலிமை மற்றும் உடல் வலிமை போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக மலை ஏறும் பயிற்சி 13/08/2019 அன்று வழங்கப்பட்டது. நம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் மாணவர்களுக்கு மலை ஏறும் (Trekking) பயிற்சி அளித்தார். திருப்பத்தூர் அருகில் உள்ள பிரான் மலையில் நடைபெற்ற இம்முகாமில் நம் கல்லூரி மாணவர்கள் 30 பேர் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்.


