
மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

இந்திய தேசிய அளவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மூன்று தாலுகாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஒன்றான இளையான்குடி தாலுகாவில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்புகள் நம் கல்லூரியில் 06/08/2019 முதல் 09/08/2019 வரை நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் இளையான்குடி, வட்டாச்சியர் திரு. S. பாலகுரு, உதவி இயக்குனர் திருமதி சுபா மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் பயிற்சியை பார்வையிட்டு பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சுமார் 110 பேர் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.


