பொருளியல் துறை பன்னாட்டு கருத்தரங்கு
நம் கல்லூரி பொருளியல் துறை சார்பாக 19/09/2019 அன்று “சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (GST) தாக்கம்” என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஆம்போ பல்கலைக்கழகத்தில் கூட்டுறவுத் துறையில் இணைப்பேராசிரியராக பணியாற்றும் முனைவர் A. தமிழரசு அவர்கள் “ஏற்றுமதி துறையில் சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மதுரை, தியாகராஜர் கல்லூரி, பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் M. ஷண்முகம் அவர்கள் “உற்பத்தி துறையில் சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம்” குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் இக்கருத்தரங்கில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் T.K. வெங்கடாசலபதி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இக்கருத்தரங்கில் மதுரை, மேலூர், அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ராஜ மஹேந்திரன் மற்றும் மாணவர்களும், தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, பொருளியல் துறை சார்பாக இணைப் பேராசிரியர் முனைவர் பரமசிவம் மற்றும் மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக உதவிப் பேராசிரியர் முனைவர் M. முஹம்மது யாசின் நன்றி கூறினார். கருத்தரங்கை உதவிப் பேராசிரியர்கள் திருமதி S.M. நர்கீஸ் பேகம், முனைவர் K. மகேந்திரன் மற்றும் முனைவர் M. மாரிமுத்து ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.