பொதுநல பட்டிமன்றம்
நம் கல்லூரியில் 04/08/2019 அன்று மறைந்த மேனாள் இந்திய ஜனாதிபதி Dr. A.P.J. அப்துல் கலாம் அவர்களின் புகழுக்கும், உயர்வுக்கும் காரணம் எளிமையான பண்பு நலமா? வலிமையான அறிவியல் மனமா? என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. “எளிமையான பண்பு நலமே” என்னும் தலைப்பில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் தலைமையிலும், “வலிமையான அறிவியல் மனமே” என்னும் தலைப்பில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் P. இப்ராஹிம் அவர்கள் தலைமையிலும் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு கனவு விதைப்பு சேவகி திருமிகு சபரிமாலா ஜெயகாந்தன் அவர்கள் நடுவராக செயல்பட்டார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் S.A. ரஷீத் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக் மற்றும் இளையான்குடி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் திரு. ஜான் முஹம்மது அவர்கள் உட்பட பேராசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் P. இப்ராஹிம் நன்றி கூறினார்.