
பயிற்சி பட்டறை – மாணவர்கள் பங்கேற்பு

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 28/08/2019 மற்றும் 29/08/2019 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக பயிற்சி பட்டறையில் நம் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழை வழங்கி கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் பாராட்டினார். அருகில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் S. நாசர்.