
பயன்பாட்டு கணிதம் தேசிய கருத்தரங்கம்

முதுகலை கணிதவியல் சார்பாக 08/09/2019 அன்று பயன்பாட்டு கணிதம் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கணிதவியல் துறை தலைவர் திரு. A. காதர் ஒலி அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் கணிதவியல் இணைப் பேராசிரியர் திரு. M. மனோகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். கணிதவியல் உதவிப் பேராசிரியர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி பல்கலைக்கழக, புள்ளியில் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் R. விஷ்ணு வரதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் கணிதவியல் மாணவ-மாணவிகள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் உட்பட 400 பேர் கலந்துகொண்டனர். இறுதியாக கணிதவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் M. ரஷீத் முஹம்மது நன்றி கூறினார்.


