
நிலவேம்பு கசாயம் வழங்கல்

நம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் சாலைகிராமம் அரசு ஆரம்ப சுகாதார மையம் இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு 24/09/2019 அன்று நடைபெற்றது. திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். சாலைகிராமம் அரசு ஆரம்ப சுகாதார மைய சித்த மருத்துவர் ரமேஷ் அவர்கள் டெங்கு காய்ச்சல் பரவும் முறை மற்றும் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், நிலவேம்பு கசாயத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாணவ-மாணவிகளிடம் பேசினார்.
தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் அவர்கள் மற்றும் சாலைகிராமம் அரசு ஆரம்ப சுகாதார மைய ஆய்வளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, பேரா. செய்யது அலி பாத்திமா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



