நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மூன்றாம் நாள் முகாம்
நாட்டு நலப்பணித் திட்டம் மூன்றாம் (08/02/2020) நாள் சிறப்பு முகாம் “சாலை பாதுகாப்பு மற்றும் சைபர் க்ரைம் விழிப்புணர்வு தினம்” என்னும் தலைப்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வி R. செய்யது அலி பாத்திமா வரவேற்றார். சாலைகிராமம் சைபர் க்ரைம் காவலர் திருமதி A. சார்லட் திவ்யா அவர்கள் சைபர் க்ரைம் குற்றங்கள், காவல் துறை நடவடிக்கைகள் மற்றும் புகார் அளிக்கும் முறைகள் குறித்து பேசினார். சென்னை, பீட்டர் கம்பெனி, மேலாளர் திரு. அசோக் மற்றும் மலேசியா, GMS நிறுவன, நிறுவனர் திரு. G.M.S. பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். காலை நிகழ்விற்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா நன்றி கூறினார்.
மதியம் நடைபெற்ற நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் A. பீர் முஹம்மது வரவேற்றார். விலங்கியல் துறைத்தலைவர், முனைவர் S. ஆபிதீன் அவர்கள் மற்றும் வழக்கறிஞர் திரு. சிவகுமார் ஆகியோர் ஆளுமை திறன் (Personality Development) குறித்து சிறப்புரையாற்றினர். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகள் பொதுமக்களிடம் பேசினர். கோவில் வளாகம், அங்கன்வாடி பள்ளி ஆகியற்றை தூய்மை செய்யும் பணிகளையும் மேற்கொண்டனர். திருவள்ளூர் கிராமத்தை சார்ந்த சிவகாமி அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு நற்பண்புகளை போதித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா நன்றி கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் , முனைவர் T.C. முஹம்மது முனீப் மற்றும் கணிப்பொறி பயன்பாட்டியியல் துறை உதவிப்பேராசிரியர் திரு. S. அரபாத் ஹசன் உட்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் 157 பேர் கலந்துகொண்டனர்.