
நாட்டு நலப்பணித் திட்ட (NSS) நிறைவு விழா

நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) நிறைவு விழா (12/02/2020) அன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா நாட்டு நலப்பணித்திட்ட ஏழுநாள் முகாம் அறிக்கையை வாசித்தார். திருவள்ளூர், ஊராட்சிமன்ற துணைத்தலைவர் திருமதி P. முத்துலட்சுமி பாபு, சாத்தானி, ஊராட்சி மன்றத் தலைவர் திரு. A.O. சிராஜுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வி R. செய்யது அலி பாத்திமா நன்றி கூறினார். கணிப்பொறி பயன்பட்டியியல் துறை உதவிப்பேராசிரியர் திரு.S. அரபாத் ஹசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் T.C. முஹம்மது முனீப் உள்ளிட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


