
நாட்டு நலப்பணித் திட்ட (NSS) ஐந்தாம் நாள் முகாம்

நாட்டு நலப்பணித் திட்டம் ஐந்தாம் (10/02/2020) நாள் சிறப்பு முகாம் “புற்றுநோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு தினம்” என்னும் தலைப்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். வழக்கறிஞர் திரு. சிவகுமார் அவர்கள் மாணவ-மாணவிகளிடம் நோய் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பு முறைகள் குறித்து பேசினார். காலை மாணவிகள் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர். பின்னர் “புற்றுநோய் தடுப்பு முறைகள் மற்றும் நோய் எதிர்ப்பு திறன்” குறித்து பொதுமக்களிடம் பேரணியாக சென்று எடுத்துரைத்தனர். சமூக வலைத்தளங்களின் நன்மை மற்றும் தீமைகள் குறித்து மாணவிகள் விவாதம் செய்தனர். மாலையில் மாணவர்களுக்கு கபடி போட்டி நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் T.C. முஹம்மது முனீப், முனைவர் M. பீர் முஹம்மது மற்றும் செல்வி R. செய்யது அலி பாத்திமா உட்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் 157 பேர் கலந்துகொண்டனர்.


