
தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பாக 04/02/2020 அன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. செல்லதுரை அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்தினார். சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகள் (தொழுநோய்), துணை இயக்குனர் மருத்துவர் சிவகாமி மற்றும் சாலைகிராமம், அரசு மருத்துவமனை, மருத்துவர் சந்திரபிரகாஷ் ஆகியோர் தொழுநோய் பாதிப்பு குறித்து மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு பேருரை நிகழ்த்தினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் T.C. முஹம்மது முனீப் நன்றி கூறினார். சுகாதார ஆய்வாளர் திரு. K. முத்துராமலிங்கம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் திரு. D. சந்திரசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா மற்றும் செல்வி R. செய்யது அலி பாத்திமா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
