
தேசிய கருத்தரங்கில் பங்கேற்பு

நம் கல்லூரி வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) துறை மாணவிகள் 32 பேர் மற்றும் 2 பேராசிரியர்கள் தேவகோட்டை, ஆனந்தா கல்லூரியில் 28/02/2020 அன்று நடைபெற்ற “டிஜிட்டல் பரிவர்த்தனைகள்- நன்மைகள் மற்றும் சவால்கள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்றனர். 13 மாணவிகள் தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இளங்கலை வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) பயிலும் S. பாத்திமா மற்றும் M. மேகலா தேவி ஆகியோர் சமர்பித்த ஆய்வு கட்டுரையை சிறந்த ஆய்வு கட்டுரையாக தேர்ந்தெடுத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அருகில் உதவிப்பேராசிரியர் முனைவர் S. வெங்கடேசன்.