
திறன் வளர் போட்டிகள் (மாணவிகள்) – 2020

மதுரை, மொழி பயிற்சி மையம் மற்றும் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து கடந்த ஜூன் மாதம் முதல் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் திறன், ஆளுமைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 25/02/2020 அன்று மாணவிகளுக்கு திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்றாமாண்டு இளங்கலை கணிதம் பயிலும் ஜாஸ்மின் ஆபியா என்ற மாணவி வரவேற்றார்.கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஜனாப் S.A.M.அப்துல் அஹத் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் மற்றும் மொழி கல்விநிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு.S. ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவிகளுக்கு கட்டுரைகளை சமர்ப்பித்தல் (Power point presentation), ஆங்கில வார்த்தைகள் சேர்த்தல் (Quotes Quest), ஆங்கிலத்தில் கதை கூறல் (Story Telling), மாறுபட்ட தலைப்புகளில் பேசுதல் (Extempore), ஓரேநேரத்தில் பல பணிகளை செய்தல் (multitasking), ஆங்கில பட்டிமன்றம் (Debate), மௌனமாக நடித்து காட்டல் (mime), வினாடி வினா (Quiz) போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் பரிசுகளை வழங்கினர். இறுதியாக மூன்றாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும் மாணவி ராதிகா நன்றி கூறினார்.









