
தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா & தைத்திருநாள் விழா

தமிழ்த்துறை சார்பாக தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் தைத்திருநாள் விழா 01/03/2020 அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் தலைமையேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் இளையான்குடி, இளையான்குடி மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் ஜனாப் ஜான் முஹம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவிப்பேராசிரியர் முனைவர் M. ஷேக் அப்துல்லாஹ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, செம்மலர்-ஆசிரியர், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியை திருமதி M. கதிஜா பீவி நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.





