
தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் சீதக்காதி அறக்கட்டளை சொற்பொழிவு

தமிழ்த் துறை சார்பாக 09/09/2019 அன்று “தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் சீதக்காதி அறக்கட்டளை சொற்பொழிவு” நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹத் முன்னிலை வகித்தார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக இளையான்குடி, இளையான்குடி மேல்நிலைப் பள்ளி மேனாள் தலைமையாசிரியர் நல்லாசிரியர் A.E. ஜான் முஹம்மது அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் திரு. M. ஷேக் அப்துல்லாஹ் நன்றி கூறினார்.
பிற்பகல் நடைபெற்ற மாணவர் கவியரங்கத்தை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் துவக்கிவைத்தார். கவியரங்கத் தலைமைக் கவிஞர், தஞ்சாவூர், கவிஞர் தஞ்சை இனியன் அவர்கள் தலைமையில் மாணவ-மாணவிகள் கவிதைகளை சமர்ப்பித்தனர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் J. அபூபக்கர் சித்திக் மற்றும் ஜனாப் A. ஹமீது தாவூத் உட்பட துறைசார் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். உதவிப் பேராசிரியை திருமதி M. கதிஜா பீவி நன்றி கூறினார். நிகழ்வினை உதவிப் பேராசியர் திரு. K. அப்துல் ரஹீம் தொகுத்து வழங்கினார்.


