
சர்வதேச யோகா தினம் 2019

பல்கலைக்கழக மானிய குழு (UGC) பரிந்துரையின் படி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 20.06.2019 அன்று மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழ்த் துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அரசு கலை கல்லூரி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. பிரசாத் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு எளிய முறையில் யோகா பயிற்சியளித்தார். கல்லூரி உடற்கல்வி ஆசிரியை திருமதி N. வெற்றி நன்றி கூறினார். உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. K.M. காஜா நஜ்முதீன் மற்றும் திரு. கோகுல் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் திரு. அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.



