
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இளம் செஞ்சிலுவை சங்கம் (YRC) சார்பாக கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 10/02/2020 அன்று நடைபெற்றது. இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் K.A.Z. செய்யது அபுதாஹிர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு மற்றும் தடுப்பு முறைகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் நன்றி கூறினார். துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் A. முஸ்தாக் அஹமது கான் உட்பட பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் 200 பேர் கலந்துகொண்டனர்.

