
உயிரி நானோ தொழில்நுட்பம் தேசிய கருத்தரங்கு

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (தமிழ்நாடு அரசு) சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வேதியியல் துறை இணைந்து “உயிரியல் நானோ வேதியியலில் சமீபத்திய போக்குகள்” குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை (RTBNC -2020) 22 & 23 ஜனவரி 2020 அன்று ஏற்பாடு செய்தது.
துவக்கவிழாவில் (22/01/2020) வேதியியல் துறைத்தலைவர் டாக்டர் K.A. செய்யது அபுதாஹிர் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முகமது ஜுபைர் கருத்தரங்க மலரை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் A. அப்பாஸ் மந்திரி வாழ்த்துரை வழங்கினார். காந்திகிராம், காந்திகிராம் பல்கலைக்கழக, நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மையம், பேராசிரியரும், இயக்குநருமான டாக்டர் S. ஆபிரகாம் ஜான் மற்றும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மூத்த உதவி பேராசிரியர் டாக்டர் G. மதுமிதா ஆகியோரும் கருத்தரங்க சிறப்புரையாற்றினர். விருதுநகர், VHNSN கல்லூரி, வேதியியல் இணைபேராசிரியர் டாக்டர் N. ராமன் மற்றும் குமாரபாளையம், JKK நடராஜா மருந்தியல் கல்லூரி, பேராசிரியர் டாக்டர் பி.ராஜ்கபூர் ஆகியோர் காலை அமர்வுக்கு தலைமை தாங்கினர். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், வேதியியல் துறை, DST-INSPIRE பேராசிரியர், டாக்டர் P. முத்து மாரீஸ்வரன், அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இரண்டாவது நாளில் (23/01/2020) அந்திரப்ரதேஷ் மாநில SVRM கல்லூரி, நானோ தொழில்நுட்ப பேராசிரியர் டாக்டர் S.S.S. மூர்த்தி சாவ்லி, ஜார்கண்ட், தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT) நிறுவனம், உதவி பேராசிரியர் டாக்டர் S. சக்திவேல் மற்றும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், வேதியியல் துறைத்தலைவர் டாக்டர் G. பரிதிமாற் கலைஞன், சிறப்புரை நிகழ்த்தினார். நிறைவு விழாவில், உதவி பேராசிரியர் டாக்டர் K. சுல்தான் சையத் இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஹாஜி V.M. ஜபருல்லா கான் மற்றும் முதல்வர் டாக்டர் A. அப்பாஸ் மந்திரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், வேதியியல் துறைத்தலைவர் டாக்டர் G. பரிதிமாற் கலைஞன், நிறைவு விழா உரை நிகழ்த்தினார். RTBNC-2020, வழிநடத்துனரும், உதவி பேராசிரியரும்மான டாக்டர்
R. ஜெயமுருகன், கருத்தரங்க அறிக்கையை சமர்ப்பித்தார். இணை பேராசிரியர் திரு. S.E.A. ஜபருல்லா கான் நன்றி கூறினார். சுயநிதி பாடப்பிரிவுகள் இயக்குநர் டாக்டர் A.சபினுல்லா கான், மானாமதுரை, மாதா கல்லூரி, முதல்வர் டாக்டர் R. டோம்னிக் சஹாய ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர்கள் டாக்டர் A. அப்ரோஸ் மற்றும் திருமதி R. பர்சனா பார்வின் ஆகியோரும் ஏற்பாடுகளைச் செய்தனர்.













