உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி – 7
தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
30/01/2020 அன்று பார்த்திபனூர், அரசு மேல்நிலைப்பள்ளி, அபிராமம், முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முதுகுளத்தூர், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் மற்றும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் S. நாசர் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினர்.