
உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
06/01/2020 அன்று காளையார்கோயில், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் ஆகியோரும், 08/01/2020 அன்று மறவமங்களம் மற்றும் சிலுக்குப்பட்டி, அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் மற்றும் வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் K. சுல்த்தான் செய்யது இப்ராஹிம் ஆகியோரும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினர்.




