
உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி – 3

தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
20/01/2020 அன்று சூராணம், St. ஜேம்ஸ் மேல்நிலை பள்ளி, சாத்தனூர், அரசு மேல்நிலை பள்ளி, R.S. மங்களம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் செங்குடி, St. மைக்கேல் மேல்நிலை பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர் திரு. S. அரபாத் ஹசன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினர்.








