
உடல் நலம் பேனல் (Fit India) இயக்கம் – 2019

29/08/2019 தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு புதுதில்லி, இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடல் ஆரோக்கியம் பேனல் குறித்த Fit India என்னும் இயக்கத்தை துவக்கிவைத்த நிகழ்வை பல்கலைக்கழக மானிய குழு (UGC) பரிந்துரைப்படி மாணவ-மாணவிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையில் உடல் ஆரோக்கியம் பேனல் (Fit India) குறித்த உறுதி மொழியை மாணவ-மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஏற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. R. ஜாஹிர் ஹுசைன், முனைவர் S. அஸ்மத்து பாத்திமா மற்றும் முனைவர் M. பீர் முஹம்மது ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



