“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” பத்தாம் நாள்
22.05.2019 “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” இன்று மாணவ-மாணவிகள் காலை 9.30 மணியளவில் மண்டபம் கேம்ப், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) மற்றும் மத்திய கடல் உவர் ஆராய்ச்சி நிறுவனம் (CSMRI) ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரு ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அறிவியல் அறிஞர்களுடன் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்துரையாடினர்.
மாலை மறைந்த மேனாள் இந்திய குடியரசு தலைவர் A.P.J. அப்துல் காலம் அவர்களின் மணிமண்டபத்தில் அவரது சாதனைகள் குறித்த விபரங்களை மாணவ-மாணவிகள் கண்டு பயன்பெற்றனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன், வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் K. சுல்த்தான் செய்யது இப்ராஹிம், கணிதவியல் உதவிப் பேராசிரியர் திரு. P. குமார், இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. G. கங்காதரன், கணிப்பொறி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் செல்வி மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியை திருமதி N. வெற்றி மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.