
“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” பன்னிரெண்டாம் நாள்

இன்றைய 24.05.2019 “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” பன்னிரெண்டாம் நாளான இன்று காலை 9.30 மணியளவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் வரவேற்றார். வேதியியல் துறை உதவிப் பேராசிரியை முனைவர் A. அப்ரோஸ் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். இன்றைய சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, கணிப்பொறி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் K. ராஜிவ் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கணிப்பொறியின் அடிப்படைகள் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறையில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறித்து பேசி, பள்ளி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
மாலை கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. P. குமார் அவர்கள் எளிதில் கணிதம் கற்கும் முறைகளை கற்பித்தார். மாணவ-மாணவிகள் கணிப்பொறியின் அடிப்படை செயல்பாடுகள் குறித்து கணிப்பொறி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. K. இராவுத்தர் நைனார் அவர்கள் பயிற்சி அளித்தார்.



