“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” பதிமூன்றாம் நாள்
பதிமூன்றாம் நாளான இன்றைய (25.05.2019) “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் காலை 9.30 மணியளவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. கணிதவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் M. ராஷித் முஹம்மது அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். இன்றைய சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர், APSA கல்லூரி, தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் N. விஜய் ஆனந்த் அவர்கள் கலந்துகொண்டு மூலக்கூறு உயிரியல் (molecular biology) துறையில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறித்து பேசி, பள்ளி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
மாலை கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் M. ராஷித் முஹம்மது அவர்கள் எளிதில் கணிதம் கற்கும் முறைகளை கற்பித்தார். கணிப்பொறியின் அடிப்படை செயல்பாடுகள் குறித்து கணிப்பொறி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் திரு. K. இராவுத்தர் நைனா மற்றும் திரு. M.E.L. சுபைர் அலி அவர்களும் பயிற்சி அளித்தனர்.