
“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” பதினான்காம் நாள்

இன்றைய (26.05.2019) பதினான்காம் நாளான “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் காலை 9.30 மணியளவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. இன்றைய சிறப்பு விருந்தினராக இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு. சிஹாபுதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் அறிவியல் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாடு, முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.
மாலை கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் திரு. M. மனோகரன் அவர்கள் எளிதில் கணிதம் கற்கும் முறைகளை கற்பித்தார்.
