
“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” நிறைவு நாள்

“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் நிறைவு நாளான இன்று (27.05.2019) காலை 9.30 மணி முதல் 1.30 மணிவரை பள்ளி மாணவ-மாணவிகளின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிமன்ற உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி, முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி, துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் மற்றும் சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் உட்பட பலர் பார்வையிட்டனர். மாணவ-மாணவிகளின் படைப்புகளில் சிறந்த படைப்புகளை அறிவியல் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு செய்து சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.
மதியம் 2 மணியளவில் நடைபெற்ற நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மாணவி சுகந்தா ஜெயசூர்யா பரதநாட்டியம் ஆடி அனைவரையும் வரவேற்றார். இன்றைய சிறப்பு விருந்தினராக கோவை, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் குமாரகோயில், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் C. சிவசுப்பிரமணியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முகாமில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் தங்களின் தனித்திறன்களை மேடை பேச்சு மற்றும் பாடல் மூலம் வெளிப்படுத்தினர். சிறந்த அறிவியல் படைப்புகள் மற்றும் முகாமில் பங்குபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் அறிவியல் ஆய்வக பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
கல்லூரி ஆட்சிமன்ற உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி மற்றும் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு. சிஹாபுதீன் உட்பட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பங்குபெற்றனர்.திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.










