
“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” மூன்றாம் நாள்

இன்றைய (15.05.2019) மூன்றாம் நாள் “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாமில் காலை 10 மணியளவில் “கணிப்பொறி அறிவியல் துறையில் இன்றைய நவீன ஆராய்ச்சிகள்” குறித்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரி கணிப்பொறி அறிவியல் உதவிப் பேராசிரியை முனைவர் P. சுமித்ரா அவர்கள் சிறப்புரையாற்றி மாணவ-மாணவிகளிடையே கலந்துரையாடினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு அளித்தார். மதியம் அறிவியல் ஆய்வக செய்முறை வகுப்புகள் நடைபெற்றன.





