“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” நான்காம் நாள்
நான்காம் நாள் (16.05.2019) “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாமில் காலை 9.30 மணியளவில் “நானோ தொழிநுட்ப ஆராய்ச்சி” குறித்து தூத்துக்குடி, VOC கல்லூரி, வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் K.M. பொன்வேல் அவர்கள் நானோ தொழில்நுட்பத்தின் இன்றைய அவசியம் குறித்து பேசினார்.
கணிதவியல் துறை இணைப்பேராசிரியர் திரு. M. மனோகரன் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு அளித்தார். அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் இயற்பியல் துறை தலைவர் முனைவர் A. முஸ்தாக் அஹமது கான் ஆகியோர் உள்ளனர். மதியம் அறிவியல் ஆய்வக செய்முறை வகுப்புகள் நடைபெற்றன. மாலை கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு. K.M. காஜா நஜ்முதீன் அவர்கள் மாணவர்களுக்கு உடற்பயிற்சி அளித்தார்.