
“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” ஒன்பதாம் நாள்

“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” இன்றைய (21.05.02019) ஒன்பதாம் நாள் முகாம் காலை 9.30 மணியளவில் தொடங்கியது. திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் வரவேற்புரை ஆற்றினார். கணிதவியல் துறை தலைவர் திரு. A. காதர் ஒளி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசினை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் S. நாசர் மற்றும் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. G. கங்காதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்றைய முகாமில் மதுரை, NMSSVN கல்லூரி, இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் J. பெர்மின் ஆங்கிலோ செல்வன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு “இயற்பியல்-முதல் அறிவியல்” என்னும் தலைப்பில் இயற்பியல் கற்றலின் முக்கியத்துவம், இயற்பியல் துறையில் எதிர்கால ஆராய்ச்சி குறித்து மாணவ-மாணவிகளிடம் பேசினார்.
மதியம் 2 மணிக்கு மேல் எளிதில் கணிதம் கற்றல் என்னும் தலைப்பில் கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. P. குமார் அவர்களும். கணிப்பொறியில் உள்ள பாகங்கள் மற்றும் கணிப்பொறியின் முக்கியத்துவம் குறித்தும் கணிப்பொறி அறிவியல் உதவிப் பேராசிரியர் திரு. M. சுபைர் அலி அவர்களும் பயிற்சி அளித்தனர்.


