
ஆங்கில மொழி கழக தொடக்க விழா

முதுகலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத் துறை சார்பாக 27/08/2019 அன்று ஆங்கில மொழி கழக தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை திருமதி M. ஷர்மிளா பானு வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை முனைவர் V. ரதி அவர்கள் கலந்துகொண்டு “ஆங்கிலக் கவிதை கற்பிக்கும் முறை மற்றும் தத்துவம்” என்னும் தலைப்பில் பேசினார். ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் S. ராமநாதன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதியாக ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை மற்றும் ஆங்கில மொழி கழக ஒருங்கிணைப்பாளர் திருமதி S. அபீபக்த்த நாயகி நன்றி கூறினார்.


