
அனிமேஷன் உருவாக்க கருவிகள் கருத்தரங்கம்

முதுகலை கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக 02/03/2020 அன்று “அனிமேஷன் உருவாக்க கருவிகள்” குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர், திரு. M. மனோகரன் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக வேலூர், வேலூர் பல்கலைக்கழக, கணிப்பொறி அறிவியல்துறை உதவிப்பேராசிரியை முனைவர் J. சாய்ரா பானு அவர்கள் கலந்துகொண்டு “அனிமேஷன் உருவாக்கம் மற்றும் செயல்முறை” குறித்து சிறப்புரையாற்றினார். இறுதியாக உதவிப்பேராசிரியர் திரு. M. முஹம்மது சிராஜுதீன் நன்றி கூறினார். துறைசார் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.




