
சமத்துவப் பொங்கல் விழா – 2020

13/01/2020 அன்று சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லா கான் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மாணவ-மாணவிகள் K. விஜயலக்ஷ்மி, M. புவனேஸ்வரி, P. ரஞ்சித் குமார், நைனாரப்பா மற்றும் பாலபவித்ரா ஆகியோர் கவிதைகளை வாசித்து உரை நிகழ்த்தினர். ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ-மாணவிகள் அனைவரும் ஒன்றுபோல புத்தாடை அணிந்து பொங்கலிட்டு சிறப்பித்தனர். சிறப்புவிருந்தினராக புதுக்கோட்டை, கம்பன் கழக இணை செயலாளர், திருமதி S. பாரதி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் அவர்கள் ஒருங்கிணைத்து, நன்றி கூறினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் S.K.M. அப்துல் சலீம் அவர்கள் உட்பட ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ-மாணவிகள் 2500 பேர் கலந்துகொண்டனர்.







