
74 வது சுதந்திர தின விழா 74 வது சுதந்திர தின விழா

நம் கல்லூரியில் 74 வது சுதந்திர தின விழா 15/08/2020 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினரை கல்லூரி ஆட்சிக்குழு மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக கருஞ்சுத்தி ஹாஜி M. பஷீர் அஹமது, சுப்ரீம் எக்ஸ்போட்ஸ், சென்னை அவர்கள் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து, தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணைமுதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் சமூக இடைவெளி பின்பற்றி கலந்துகொண்டனர்.



