
49 வது விளையாட்டு விழா 2019

24/02/2019 அன்று நம் கல்லூரியில் 49 வது விளையாட்டு விழா நடைபெற்றது. மதுரை சரக, காவல்துறை துணைத் தலைவர் (சிறைத்துறை) (DIG) திரு. D. பழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். முன்னதாக கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் சிறப்பு அணிவகுப்பு மரியாதை செலுத்தி சிறப்பு விருந்தினரை வரவேற்றனர். கல்லூரி ஆசிரியர்களுக்கு மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் உடற்கல்வித் துறை ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்த் துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் நன்றி கூறினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் தொகுத்து வழங்கினார்.
கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹத், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் S.A. ரஷீத் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. சபினுல்லாஹ் கான், மதுரை மத்திய துணை சிறைத் துறை அலுவலர் (ஓய்வு) திரு. K. காளிதாஸ் மற்றும் இளையான்குடி பிரமுகர் திரு. முஹம்மது முஸ்தபா உட்பட பலர் கலந்துகொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. K.M. காஜா நஜ்முதீன், திருமதி N. வெற்றி மற்றும் செல்வி ஐஸ்வர்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.










