
48வது கல்லூரி ஆண்டு விழா

02/04/2018 அன்று 48வது கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முனைவர் A. ஜஹாங்கிர், துணை முதல்வர் வரவேற்றார். ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் தலைமையுரையாற்றினார். அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர், கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் மற்றும் ஜனாப் S.A.M. அப்துல் அஹத், கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் A. அப்பாஸ் மந்திரி, முதல்வர் கல்லூரி ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். அல்ஹாஜ் S.M. யூசுப், தலைவர், முஹம்மது சதக் கல்வி அறக்கட்டளை மற்றும் அல்ஹாஜ் K. ஹசன் அலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஜனாப் N.H. ஜப்பார் அலி, கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் ஜனாப் A. ஹமீது தாவூத், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் P. இப்ராஹிம், தமிழ்த் துறை தலைவர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான், M.A., Ex. M.P. மாநில துணைத் தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், பல்கலைக்கழக தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கும் பதக்கம், சான்றிதழ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. திரு. M. மனோகரன், கணித்துறை இணை பேராசிரியர் நன்றி கூறினார்.




